Powered By Blogger
Custom Search

Monday, February 8, 2010

உனக்கென நான் எனக்கென நீ


அதி காலை நேரம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டாள் பாரதி,
ச்சே
இதுஎன்ன கெட்ட கனவு என நினைத்து கொண்டாள்
அப்போது
செல் போனில் மெசேஜ் வந்தது டக் கென்று எடுத்து பார்த்தாள் காலை வணக்கம் என தோழி இன் மெசேஜ் கிடைத்தது.
எப்போதுமே
அவளுக்கு முதல் மெசேஜ் வருவது அவளின் காதலன் விமலிடம் இருந்து தான், இன்று அவன் மெசேஜ் அனுப்ப வில்லை அது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது, அவன் மீது கோபம் வந்தது அவனை என்ன செய்கிறேன் பார் என அவனுக்கு டயல் செய்ய அவன் நம்பர் எடுக்க போனாள், சட்டென நிறுத்தினால் ,முன் தினம் நடந்த அந்த கசப்பான நேரம் நினைவுக்கு வந்தது ,
இருவரும்
பைக்கில் செல்லும் போது ,
ஏய்! எனக்கு, ரொம்ப தாகமா இருக்கு பைக் ஓரமா நிறுத்தி இளநீர் வாங்கி தா,
கொஞ்சம் பொறு ஷோ வுக்கு டைம் ஆகுது நேரா அங்க போய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி தரேன் என்றான் விமல்
அதெல்லாம் முடியாது என்னக்கு இப்பவே வேணும்
அந்த நேரம் அங்கு ஒரு கடை வர, பைக்கை ஓரம் கட்டினான் விமல்
ஒரு இளநீர் தாங்க என்றான்
என்னடா ஒன்னு போதுமா உனக்கு வேண்டாமா என்றாள்
இல்ல வேணாம்
இளநீர் கைக்கு வந்தது ,அவளிடம் கொடுத்தான் அவள் குடித்து கொண்டுஇருக்கும் போது கடை காரரிடம் பணம் கொடுத்து கொண்டு இருந்தான்
டேய் எனக்கு போதும் நீ குடி என்றாள்,
இல்ல, வேணாம் முழுசா குடிச்சிடு
போதும் பா நீ குடி ப்ளீஸ்
சரி ,அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தான் என்னடா இது யாரு தேனை உள்ள ஊத்துனது என்றான்
டேய் ,இதெல்லாம் ஓவர் டா என்றாள் சிரித்து கொண்டே,அப்போது அவர்கள்அருகில் ஒரு ஆட்டோ நின்றது உள்ளிருந்து விமலின் அப்பாவும் அம்மாவும்இறங்கினர் அவர்களை பார்த்தவுடன் இருவருக்கும் முகம் மாறியது அவன்பின்னால் சென்று ஒதுங்கினால் பாரதி
யாருடா இவ என்றார் அப்பா
அது.... அது வந்து ... என் கிளாஸ் மேட் பா
அம்மா அவளை முறைத்து கொண்டு நின்றாள்
நாலு நாளா காலேஜ் போகாம என்ன பண்ற ?,எங்க போன ?இப்ப கூட நான்
உன் காலேஜ் தான் போயிட்டு வரேன், உங்க hod உங்க ரெண்டு பேரை பத்தி
புட்டு புட்டு வெச்சாரு என்றார்,
நீ யாரு மா என்றார் அவளை பார்த்து ,
நான் பாரதி என்றாள்
நீ எங்க இருக்க
hostel தங்கி படிகிறேன் சார் என்றாள்
அதான் கேக்க ஆளு இல்ல, எப்படி யாவது ஒருத்தனை வளைச்சு போடறதுக்கு மட்டும் எப்படி முடிது, ட்ரைனிங், எதாவது போறிங்களா? சீ இதெல்லாம் ஒரு பிழைப்பா ?என்றதும் பாரதி கண்ணில் நீர் முட்டி கொண்டு வந்தது அக்கம் பக்கம் இருக்கும் கூட்டம் கூட ஆரம்பித்தது,
டேய் ,வண்டிய எடுடா என்றார் அப்பா
ஏதும் பேசாமல் வண்டியை எடுத்தான் விமல்
விமல் என்ன செய்ய போகிறான் என்று ஆவலாய் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது ,
அவன் பின்னால் அவன் அப்பா ஏறி கொண்டார்
ஏய் ஆட்டோ வந்து சேரு நான் அவன் கூட போகிறேன் என்று அவன்அம்மாவிடம் கோபமாக சொன்னார் விமல் வண்டி கிளம்பியது
விமல் அவளை திரும்பி கூட பார்க்காமல் அவன் அப்பாவுடன் சென்றான்
பாரதி யோட purse கூட விமல் கூட போய்டுச்சு ,அக்கம் பக்கம் எல்லாம் பாரதி யை பார்த்து கொண்டு நின்றனர் ,கூட்டத்தில் ஒருவன் என்னடா மச்சான் என்றான் தெரியல டா ஏதோ லவ் பிரச்சனை போல அப்பன் வந்ததும் பிகரை நடு ரோட்டில் போய்டான் என்றான் பாரதி காது பட,
முட்டி
கொண்டு இருந்த கண்ணீர் பொல பொல என விழுந்தது
அங்கிருந்து நகர தொடங்கினாள் என்ன செய்வது என்று புரிய வில்லை அப்போது தான் தன்னுடைய purse விமலிடம் இருப்பது நினைவுக்கு வந்தது, எப்படி திரும்பி போவது என்று புரிய வில்லை உடனே தன்
போன் தோழிக்கு டயல் செய்தாள் போனில் பேலன்ஸ் இல்லை என பதில்வந்தது நிலை குலைந்து போனாள் ,ஹாஸ்டெல் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்
கொஞ்ச தூரம் நடந்தவுடன் திநகர் 12 km என போர்டு இருந்தது. அதை பார்த்ததும்
கோபம் கோபமாக வந்தது ,அவளின் கோபம் முழுவதும் விமல் மீது திரும்பியது இனி ஜென்மத்துக்கும் அவன் முகத்தில் முழிக்க கூடாதுன்னுமுடிவெடுத்தாள்,அவள் hostel வந்து சேர இரவு மணி 10 தாண்டியது ரொம்ப மயக்கமாக வந்தது நேராக சென்று சாப்பிட்டாள் பிறகு தான் அப்பாடா...என்று இருந்தது பேசாமல் சென்று படுத்து கொண்டு போர்வையை முழுசாக போர்த்தி கொண்டு அழ ஆரம்பித்தாள் அசதியில் அப்படியே தூங்கி போனாள் பாரதி.
அதி
காலை நேரம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டாள் பாரதி,ச்சே இதுஎன்ன கெட்ட கனவு என நினைத்து கொண்டாள் அப்போது செல் போனில்மெசேஜ் வந்தது டக் கென்று எடுத்து பார்த்தாள் காலை வணக்கம் என தோழி இன் மெசேஜ் கிடைத்தது.எப்போதுமே அவளுக்கு முதல் மெசேஜ் வருவது அவளின் காதலன் விமலிடம் இருந்து தான் இன்று அவன் மெசேஜ் அனுப்ப வில்லை அது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது அவன் மீது கோபம் வந்தது அவனை என்ன செய்கிறேன் பார் என அவனுக்கு டயல் செய்ய அவன் நம்பர் எடுக்க போனாள் சட்டென நிறுத்தினால் அருகில் தூங்கி கொண்டு இருந்த தன் தோழியை எழுப்பினாள் ,
மகி... மகி ... எழுந்திரு டி
சோம்பல் முறித்து கொண்டே எழுந்தாள் ,மகி என்னடி ? என்றாள்
ஒரு விஷியம் பேசணும் என்றாள்
சொல்லுடி நான் அப்படியே கண்ணை மூடி கொண்டே கேட்கிறேன் என்றாள்
பாரதி சொல்ல சொல்ல மெல்ல கண்ணை திறந்தவள் நிமிர்த்து உட்கார்ந்துவிட்டாள்,
என்னடி சொல்ற ?
ஆமாண்டி அவன் என்னை விட்டுவிட்டு அவன் அப்பா கூட பைக் போய்ட்டான் அப்புறம் நான் 15 km நடந்தே வந்து சேர்ந்தேன் என்றாள் பாரதி
ஏண்டி உனக்கு என்ன தலை எழுத்தா?ஒரு போன் பண்ண வேண்டியது தான ?
போன் balance இல்ல
சரி ஒரு ஆட்டோ புடிச்சு இங்க வந்தப்புறம் பணம் குடுத்து இருக்கலாம் இல்ல
ஸ்ஸ்ஸ் ... இது எனக்கு தோணவே இல்லடி எனக்கு நேத்து ஒன்னுமே புரியலடி
சரி சரி இதெல்லாம் காதல் சகஜம் என்னைக்கோ ஒரு நாள் அவன் அப்பாஅம்மாவுக்கு தெரிய தான போகுது விடு
இல்லடி நேத்து அவங்க அப்பா எல்லார் முன்னாடியும் அசிங்கமா பேசிட்டாறு இனி என்னை எப்படி ஏத்துக்குவாங்க?
அதெல்லாம் அப்படி தான், இதே உங்க அப்பாவும் அம்மாவும் ரோடு உங்களை பார்த்து இருந்தா அவன் நிலைமைய நினைச்சு பாரு ரோட்ல உங்க அப்பா அவனை அடிச்சு இருப்பாரு இல்ல
ஆமாண்டி ஆனா நான் எங்க அப்பா கூட போய் இருக்க மாட்டேன், அவன் கூடதான் போய் இருப்பேன்
சும்மா பேசாதடி நீ அந்த சூழ்நிலையில இருந்தா கூட அப்படி தான் நடந்து இருப்ப
சரி விடு அவனுக்கு போன் பண்ணு
அதெல்லாம் முடியாது நேத்து என்னை நடு ரோடு விட்டுட்டு போய்ட்டான் அவனை நான் மன்னிக்கவே நேத்து நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்
என்றாள் கோபமாக
இப்படி தாண்டிஎன்னோட cousin ஒருத்தன் அவனோட லவ் மேட்டர் வீட்ல தெரிஞ்சு போச்சு சினிமா ஹால் ல படம் பாக்கும் போதுமாட்டிகிட்டான் அந்த பொண்ணைஅங்கயே கண்ணா பின்னானு திட்டி அவமான படுதிட்டாறுஅவங்க அப்பா போதாதுக்கு அவ வீட்ல வேற சொல்லிடாரு
இவ கோவிச்சு கிட்டு அவன்கிட்ட போன் பண்ணாம இருந்தா ஆனா அவன் வீட்ல செம பிரச்சினை அவன் இவளுக்கு போன் பண்ணி இருக்கான் இவ அவன் கிட்ட பேசல,அவன் தற்கொலை பண்ணிகிட்டான் அதை இவ கேட்டவுடனே மயக்கம் போட்டு விழுந்தவ 15 நாள் கோமாள இருந்துட்டு
அப்புறம் தான் முழிச்சாஅவ அவன நினைச்சு அழாத நாள் இல்ல அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு அவள சமாதான படுத்தி கல்யாணம் பண்ணினாங்க
பசங்களுக்கு இந்த சமயத்துல ஒரு அறுதல் தேவை என்ன நடந்தாலும் ரெண்டு பேரும்பிரிய கூடாதுன்னு தான லவ் பண்ணீங்க..
ஆமா
அப்புறம் என்ன ப்ளீஸ் அவனுக்கு போன் பண்ணு
வேண்டாவெறுப்பாக போன் ஐ எடுத்தாலும் வேகமாகவே டயல் செய்தாள்பாரதி
எதிர் முனையில் switched off என பதில் வந்தது
அப்போ அவன் வீட்ல பிரச்சினை போல என யோசித்தவாறு சொன்னால் மகி
இப்போ என்னடி பண்ணலாம் என்றாள் நடுக்கத்துடன்
ஒண்ணு பண்ணலாம் அவன் வீடு உனக்கு தெரியும் இல்ல
ம்ம் .. தெரியும்
கிளம்பு அங்க போய் என்னனு பாக்கலாம்
என்னடி என்னன்னவோ சொல்ற ,எனக்கு பயமா இருக்கு டி

அதெல்லாம் ஒன்னும் ஆகாது டி கிளம்பு சீக்கிரம்
ஐந்து நிமிடத்தில் இருவரும் கிளம்பினர்
ஆட்டோ வில் விமல் வீட்டை நோக்கி கிளம்பினர்,விமலின் தெரு முற்றத்தில் ஆட்டோ நின்றது தலையில் துப்பட்டாவை கட்டி கொண்டாள் பாரதி
தெருவின் உள்ளே நுழைந்ததும் விமலின் வீட்டை பார்த்தாள்வீட்டின் முன் சாமியான போடப்பட்டு இருந்தது பாரதிக்கு தூக்கி வாரி போட்டது மகியின் கையை இறுக்கமாக பிடித்தாள்அப்போது தெருவில் சில இளைஞர் கள் பயங்கர சத்ததுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர் அங்கு பார்த்தாள் விமல் சந்தோஷத்துடன் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தான் மற்றவர்களின் சத்ததை விட விமலின் சத்தம கொஞ்சம் அதிகமாகவே இருந்ததுஅதை பார்த்தவுடன் பாரதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது பாரு மகி நம்ம எவ்வளவு கஷ்ட பட்டு இவனை பாக்க வந்தாஎவ்ளோ ஜாலி யா இருக்கான் பாரு என கண் களங்கினால் நான் அவனை கூப்பிடட்டுமா என்றாள் மகி
இல்ல மகி வேண்டாம் விட்டுடு நாம கிளம்பலாம்
இருவரும் கிளம்பினர் தெரு முற்றத்தில் வரும் போது மகி எனக்கு மயக்கமா இருக்கு தண்ணி வேணும் என்றாள்அப்போது தெரு முனையில் ஒரு பார்க் தென்பட்டது,
பாரதி அங்க பாரு ஒரு பார்க் இருக்கு நீ அங்க வெயிட் பண்ணு நான் போய்தண்ணி வாங்கிட்டு வந்து விடுகிறேன் என்றாள் மகி
பாரதி பார்க்கின் உள்ளே வந்தவுடன் தன்தலையில் கட்டி இருந்த துப்பட்டாவை கழட்டினாள் கண்கள் முழுவதும் சிவந்து இருந்தது பாவி சிரிச்சி சிரிச்சே என்னை ஏமாத்திட்டான் இவன போய் நம்பி லவ் பண்ணிடேனே என தனக்கு தானே புலம்பி கொண்டு அழுதாள்அப்போது தன் தோள்பட்டையை யாரோ இறுக்கமாக பிடிப்பதை உணர்ந்து மகி தான் வந்து விட்டாள்என எண்ணி கண்ணை அவசரமாக துடைத்து கொண்டு திரும்பினாள் திரும்பியவளுக்கு அதிர்ச்சி அங்கு நின்றது விமல் அதே வெள்ளிந்திசிரிப்புடன் அவனை கண்டதும் ஏதும் புரியாத பாரதி அவனை இறுக்கமாக (கற்று புகா வண்ணம் )கட்டி பிடித்து கொண்டாள் ஐ லவ் யு, ஐ லவ் யு இனி என்னை இப்படி தவிக்க வெக்காதே நீ இல்லனா நான் ...நான் ... அதைஎன்னால சொல்லகூட முடியல என்றாள்
ஏய் என்ன ஆச்சு உனக்கு என்றான்
உங்க வீட்ல ஒன்னும் பிரச்சினை இல்லையே என்றாள்
இல்ல இல்ல நேத்து எங்க பாட்டி இறந்துடாங்க அப்பாவை அம்மா போய் கூட்டிட்டு எனக்கு போன் பண்ணி இருக்காங்க லைன் கிடைகள காலேஜ் போய் இருக்காங்க அங்க நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சு,வரும் போது தான் நாம மாட்டி கிட்டோம் அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை நான் சமாளிச்சி விடுவேன்
அப்புறம் ஏன் உன்னோட போன் சுவிட்ச் ஆப் ல இருந்தது என்றாள் பாரதி

ஏய் நான் தான யாராவது போன் பண்ணுவாங்கனு ஆப் பண்ணி உன் purse ல வச்சேன் என்றான்
ஐயோ லூசு என்னோட purse உன்னோட பைக் கவர் ல தான் இருக்கு என்றாள்
ஐயோ அப்போ நேத்து நீ எப்படி போன
நடந்து தான் போனேன்
அச்சச்சோ ஐம் சாரி டி உன் purse என் கிட்ட இருப்பது எனக்கு தெரியாது செல்லம் என நெற்றியில் முத்தமிட்டான்
நீ என்னை எந்த அளவுக்கு லவ் பண்ற னுஅடிக்கடி கேட்பேன் நீ சொல்ல மாட்ட ஆனா இன்னிக்கு காட்டிட இ லவ் யு சோ மச் என்றான்
தண்ணி வங்கி கொண்டு வந்த மகி அவர்கள் நின்ற கோளத்தைபார்த்து அதை அவள் தலையில் கொட்டி கொண்டாள்...

(இதுக்கு மேல அங்க நடப்பதுஅவங்க பர்சனல்அதை நாம பாக்க கூடாது )


நன்றி ..................